தென் சென்னை பாஜக வேட்பாளர் இல.கணேசன் ஜல்லடியன் பேட்டை, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதியில் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது; ஊழல் நிறைந்த நிர்வாகம், நாட்டின்பாதுகாப்பு கேள்விக் குறியாகி விட்ட நிலையில் தவறுக்குமேல் தவறுசெய்து காங்கிரஸ் தனித்து தவிக்கிறது. உடனடியாக இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

இந்ததேர்தல் திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற தேர்தல். ஜெயலலிதாவா? கருணாநிதியா? என்பதல்ல. அதிமுக. தேர்தல் அறிக்கையில் ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். தமிழகத்தை நினைத்துபாருங்கள். குஜராத்தில் ஊழல் இல்லை. 24 மணி நேரம்மின்சாரம் இருக்கிறது. அங்கு டாஸ்மாக் இல்லை. இங்கு மானம்போகிறது. டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது. நிலையான ஆட்சி இல்லாவிட்டால் நாடு தாங்காது.

நாட்டில் மாற்றம் ஏற்பட மோடி பிரதமர் ஆகவேண்டும். மோடியை பிரதமர் ஆக்க தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள் என்று அவர் பேசினார்.

Leave a Reply