பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உ.பி.,யின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இதில் வதோதராதொகுதிக்கு வருகிற 30ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்ததொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாளாகும்.

இந்நிலையில், வதோதரா தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக நரேந்திர மோடி கூறியுள்ளார். வேட்பு மனுதாக்கல் செய்தபின்னர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து ஆசி பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நரேந்திரமோடி வேட்புமனு தாக்கல் செய்யும் போது பா.ஜ.க.,வின் முக்கிய மூத்த தலைவர்கள் உடன் இருப்பார்கள் என தெரிகிறது.

Leave a Reply