மக்களவை தேர்தல்முடிவில் முன்னெப்போதும் இல்லா வகையில் புதியவரலாற்றை பா.ஜ.க.,வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி படைப்பார் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத் தலை நகர் திருவனந்தபுரத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் ஓ.ராஜ கோபாலை ஆதரித்து அத்வானி செவ்வாய்க் கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல்முடிவை தொடர்ந்து எந்தக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். பா.ஜ.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தலில் வரலாறுகாணாத வெற்றியை பெறும். அந்தவரலாற்றை நரேந்திர மோடி உருவாக்க உள்ளார். .

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, பதவியிலிருக்கும் பிரதமர் (மன்மோகன் சிங்) வேறு வீடுதேடுவது இதுவே முதன்முறையாகும்.

காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவீர்களா என்று மக்களிடம் கேட்டால், உரத்தகுரலில் இல்லை என்றே பதில் அளிக்கிறார்கள். தேசிய அரசியலில் இடது சாரிகளின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அவர்கள் திரிபுரா, கேரளம் மற்றும் மேற்குவங்கம் என 3 மாநிலங்களுக்குள் சுருங்கி விட்டனர். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பி, அதிகளவிலான மக்கள் பா.ஜ.க.,வில் இணைந்து வருகின்றனர் என்று அத்வானி கூறினார்.

Leave a Reply