பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ். தலைவர்களின் படங்கள் இருப்பதாக தவறானதகவலை திமுக பொருளாளர் முக. ஸ்டாலின் தெரிவித்திருப்பதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒருசந்தர்ப்பவாத கூட்டணி என்று திமுக பொருளாளர் முக. ஸ்டாலின் கூறியிருப்பது வியப்பளிக்கிறது.

கடந்த ஆண்டுகால ஆட்சியில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்துகொண்டு பலன்களை அனுபவித்தது தி.மு.க.

தேர்தலுக்கு சிலமாதங்களுக்கு மத்திய அரசை விட்டுவிலகி, தங்களை சுத்தமானவர்கள்போல காட்டிக்கொள்ள முயற்சிக்கும் தி.மு.க.,வின் சந்தர்ப்பவாதத்தை தமிழகமக்கள் நன்கறிவார்கள்.

பாஜக தேர்தல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ். தலைவர்களின் படங்கள் இருப்பதாக முக. ஸ்டாலின் கூறி்யிருக்கிறார். பா.ஜ.க தேர்தல் அறிக்கையை அவர் படிக்கவில்லை என்பது மட்டுமல்ல, பார்க்கவே இல்லை என்பது தெரிகிறது.

பாஜக தேர்தல் அறிக்கைகுறித்து தவறான தகவல்களை தெரிவிப்பது துணை முதல்வராக இருந்த ஒருவருக்கு அழகாகாது. மாற்றுக் கட்சியினரைப் பற்றி விமர்சிக்கும் போது அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply