மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில் திமுக- அதிமுக இரு கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. தமிழகத்தில் 3வது அணி ஆற்றல் மிக்கதாக உருவாகி இருக்கிறது திமுக- அதிமுகவை பாரதிய ஜனதா தலைமையிலான அணி நடுநடுங்க வைத்துவிட்டது. பழைய தீய விளையாட்டை கைவிடும் நிலைமையை திமுக- அதிமுகவுக்கு பாஜக அணி ஏற்படுத்தியுள்ளது . என்று பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார். மேலும் அவர், மாநிலங்களை மத்திய அரசு அடிமைபோல் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

சென்னை மீனம்பாக்கத்தில் நடந்த தேர்தல்பிரசார கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: புத்தாண்டு காணும் தமிழக மக்களுக்கு கடவுள் வரங்களை அள்ளித்தர வேண்டும் என வேண்டுகிறேன். தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு ஆவேசம் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். இன்று சிறந்த நாள். இன்று மகா வீரர் ஜெயந்தி.நாளை ஏப்ரல் 14 அம்பேத்கார் பிறந்த நாள் மற்றும் தமிழ்புத்தாண்டு . நான் கடவுள் லட்சுமி சரஸ்வதி ஆகியோரை தமிழக மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.

மக்கள்சபதம்: 2014ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தனித் தன்மை மிக்கது.. பல தேர்தல்களை நான் கண்டுள்ளேன். இந்ததேர்தலில், மத்திய அரசுக்கு எதிரான கோபம் மக்களிடம் வெளிப்பட உள்ளது.இந்த தேர்தலில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அரசு வெளியேற்றப்பட்டு விடும். இதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது பா.ஜ. தலைமையில் புதிய அரசு அமையும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். நினைக்கின்றனர். இந்ததேர்தல் நம்பிக்கைக்கான தேர்தல், இதில் சந்தேகம் இல்லை. இந்த தேர்தலில் மக்களிடம், உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.நாட்டு மக்கள் 10 ஆண்டுகளாக பரிதவிக்கின்றனர். மத்திய ஆட்சி அலங்கோலத்தை கண்டு மக்கள் பரிதவிக்கின்றனர். மத்தியில் உள்ள அரசு ஊழலில் புதியசாதனை படைத்துள்ளது. மக்களுக்கு தற்போதைய தேவை ஒருமாற்றம். மத்திய அரசை மாற்றுவோம் என்ற சபதத்தை மக்கள் எடுத்து விட்டார்கள்.நாம் இந்த தேர்தலை வெற்றியோடு எதிர்கொள்ள வேண்டும். இந்தியா வரும் நூற்றாண்டில் எப்படி இருக்கும் என நிர்ணயிக்க போகும் தேர்தல்

நாட்டின் அடிப்படை தத்துவம் கூட்டாட்சி. ஆனால் அதற்கு நேர் மாறாக இயங்கும் அரசு மத்தியில் உள்ளது. பிராந்திய அரசுகளின் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்கவில்லை. மக்களின் எண்ணங்களக்கு மதிப்பு கொடுக்கும் அரசு வந்தே தீரும். டில்லியில் உள்ள மத்திய அரசு மாநில அரசுகளின் எண்ணங்களை, ஆசைகளை சட்டை செய்வது கிடையாது. மாநிலங்களை தங்கள் அடிமைகள் என எண்ணுகின்றனர். மாநில அரசுகள், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு மத்தியில் அமையும் என்பது உறுதி. நான் 4வது முறையாக முதல்வராக உள்ளேன். மாநிலங்களை எவ்வாறு கேவலமாக நடத்துகிறது என்பதை அனுபவித்து கூறுகிறேன், டில்லியில் உள்ள அரசு, நமது அரசியலமைப்புக்கு விரோதமாக உள்ளது. ஆனால் அடுத்து அமையும் அரசு, மக்கள் மற்றும் மாநிலங்களுடன் தோல் நின்று வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் என உறுதியோடு தெரிவித்து கொள்கிறேன்.

பா.ஜ., மற்றும் தோழமை கட்சிகளுடன் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு ஆட்சி அமையும். தே.ஜ., கூட்டணி, பல கட்சிகள் சேர்ந்த அமைப்பு. நாங்கள் அனைவரும் ஒரே அணியாக நின்று, நாட்டின் பிரச்னைகளை தீர்ப்போம் என்ற உறுதிமொழியை அளிக்க விரும்புகிறேன். நம் நாட்டின் தேர்தல் வரலாற்றில் 25 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வுடன் 24 கட்சிகள் இணைந்துள்ளது என்றால் புது வரலாற்றை அமைத்துள்ளது என்பதில் ஐயமில்லை.நாங்கள் அமைத்துள்ள இந்த கூட்டணி, இந்தியாவுக்குமல்ல. தமிழகத்துக்கு புதிய மாற்றம் தரும்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் நடுவே மக்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். ஒரு கட்சி ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி அமைத்தால் மற்றொரு கட்சியை அழிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். உன்னை நானொழிப்பேன்… நான் உன்னை ஒழிப்பேன் என சிந்திக்கிறார்களே தவிர மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில் திமுக- அதிமுக இரு கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. தமிழகத்தில் 3வது அணி ஆற்றல் மிக்கதாக உருவாகி இருக்கிறது திமுக- அதிமுகவை பாரதிய ஜனதா தலைமையிலான அணி நடுநடுங்க வைத்துவிட்டது. பழைய தீய விளையாட்டை கைவிடும் நிலைமையை திமுக- அதிமுகவுக்கு பாஜக அணி ஏற்படுத்தியுள்ளது

தமிழக மக்கள் தி.மு.க., அ.தி.மு.க, ஆட்சிக்கு நடுவில் சிக்குண்டு தவிக்கின்றனர். 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும் இருவரும் ஒருவரை ஒருவர் அழிப்பது என்பதில் கவனம் செலுத்துகின்றன.இரு கட்சிகளும் மக்கள் நலன் பற்றி சிந்திக்கவோ, கவனம் செலுத்தவோ மக்கள் பற்றி சிந்திக்கவோ இல்லை.பா.ஜ., தலைமையிலான 3வது அணியை கண்டு தி.மு.க., அ.தி.மு.க., அச்சமடைந்துள்ளன. தற்போது, உருவாகியுள்ள 3வது அணி, மக்களின் எண்ணங்கள் மற்றும் ஆசைகளை நிறைவற்ற உறுதி பூண்டுள்ளது.

மாநிலங்களை சில அணிகளாக நினைத்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்கøள் பிரச்னைகள் ஒரே மாதிரியானவை. கடலோர மாநிலங்கள், எல்லையோர மாநிலங்கள், எல்லா பிரச்னைகளையும் மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒரே அணியாக செயல்படுவோம் என்ற உறுதியை அளிக்கிறேன்.

காங்கிரஸ் கட்சி நிலை கவலைக்கிடமாக உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓடிவிட்டனர்.ராகுல் ஏழைகளின் குடிசைகளுக்கு சுற்றுலா செல்வதுபோல் செலகிறார். காங்கிரஸ் மீதான மக்களின் கோபம் இந்த தேர்தலில் வெளிபடும்.ஏழைகளின் பெயரை சொல்லி காங., ஏமாற்றுகிறது.தேர்தல்நேரத்தில் மட்டும் தான் ஏழைகளின் நினைவு வருகிறது. ஏழைகளின் குடிசைகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொண்டு மிகைப்படுத்த விரும்புகிறார்.ராகுலுக்கு வறுமை என்றால் தெரியாது.அவர்கள் பொன்னான கட்டிலில் பிறந்து வளர்ந்தவர்கள் அவர்கள். ஏழ்மையை விளம்பரத்துக்காக காங்கிரஸ் பயன்படுத்துகிறது.நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்து தேநீர் விற்றவன். ஏழ்மையில் பிறந்து ஏழையாகவே வாழ்ந்தவன்.காங்கிரஸ் தனது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.வாஜ்பாய் அரசில் 7 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தற்போது 10 கோடி வேலைவாய்ப்பு தருவதாக காங்.,கூறுகிறது. முன்னர் கூறிய உறுதிமொழி என்ன ஆயிற்றுகாங்கிரசின் தேர்தல் அறிக்கை ஏமாற்றுவேலை.

தமிழக மற்றும் இந்திய இளைஞர்களுக்கு ஒரு உறுதிமொழி அளிக்க விரும்புகிறேன். புதிய அரசு பதவியேற்கும்போது வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேலைவாய்ப்பு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

மீனவர்கள், நாட்டில் முக்கியமானவர். மத்திய அரசு மீனவர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. நவீன தொழில்நுட்பம் மூலம் மீனவர்கள் முன்னுக்கு வர முடியும். மீனவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவேன் என்ற உறுதியை ஏற்கிறேன்.தமிழக மீனவர்கள், இலங்கையால் தாக்கப்படுகின்றனர். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் தாக்கப்படுகின்றனர். கேரள மீனவர்கள் இத்தாலியால் தாக்கப்படுகின்றனர். மீனவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்போம். மீனவர்களின் நம்பிக்கை வானமே எல்லையாக உள்ளது. மீனவர்கள் நலனுக்க செயல்திட்டம் வகுத்து நிறைவேற்றுவோம்.

மத்தியில் ரிமாட் கண்ட்ரோல் மூலம் ஆட்சிநடக்கிறது. கோமாவில் இருக்கும் அரசு தேவையில்லை.பா.ஜ., வலிமையான அரசு அமைப்போம். மத்தியில் துணிச்சல் மிக்க அரசு இல்லாததால் மக்கள் அனைவரும் ஒய்ந்து போயுள்ளார்கள்.125 கோடி மக்கள் கொண்ட இந்த நாட்டில் ஏன் இந்த நிலை ஏற்பட வேண்டும். இலங்கை, பாகிஸ்தான். வங்கதேசம் நம்மை மிரட்டுகின்றன. அந்த மிரட்டலை எதிர்கொள்ளும் வகையில் மத்தியில் வலிமையான அரசு அமையும். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் தமிழர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலன் காக்கப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பதை மறு ஓட்டு எண்ணிக்கை அமைச்சர் சிதம்பரம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

Tags:

Leave a Reply