சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவமதித்து வருகிறார் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார். அம்பேத்கரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு அகமதாபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் இளவரசர் அண்மை காலமாக அம்பேத்கரை அவமதித்துவருகிறார். காங்கிரஸ் மக்களுக்கு பல்வேறு சட்ட உரிமைகளை வழங்கியிருப்பதாக அவர் கூறுகிறார்.

அரசியல் சட்டசாசனத்தின் மூலம் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியவர் அம்பேத்கர். யாராவது ஒருவர் நான் தான் சட்டங்களை இயற்றினேன் என்று கூறினால் அது அம்பேத்கரை அவமதிக்கும்செயல். அரசியல் சாசனத்தை பற்றி தெரியாதவர்கள் சட்டத்துக்கு உரிமை கொண்டாடு கிறார்கள்.

சட்டத்தின் மூலம் மக்களுக்கு அம்பேத்கர் வழங்கிய பல்வேறு அடிப்படை உரிமைகளை சோனியாகாந்தி குடும்பத்தினர் பறித்துவிட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாய்ப்பூட்டு போட்டது யார்? அது சோனியா குடும்பத்தினர் என்பது நாடறிந்தவிஷயம். பிரதமரின் பேச்சுரிமையை அவர்கள் பறித்துவிட்டனர்.

அம்பேத்கர் மட்டும் இல்லை யென்றால் என்னைப் போன்றவர்கள் இன்று இந்த உயர்ந்த நிலையை அடைந்திருக்க முடியாது. காங்கிரஸ்கட்சி அம்பேத்கருக்கு உரியமரியாதையை அளிக்கவில்லை. புத்தர் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை வாங்க நேரு மறுத்துவிட்டார்.

அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சிகளில் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்ப டவில்லை. பாஜக ஆதரவிலான ஆட்சியில்தான் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது என்றார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச்சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி இருப்பதாக ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதற்குப்பதிலடி கொடுக்கும் வகையில் நரேந்திர மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

Leave a Reply