பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ராமநாத புரத்தில் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது பாஜக ஆட்சியின் போது தேசியநதிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததும் காவிரி, கங்கை தேசிய நதிகள் இணைக்கப்பட்டு தமிழகமக்களின் பாசன நீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறினார். மேலும், இந்திய மீனவர்களை காக்க மத்திய காங்கிரஸ் அரசு தவறி விட்டது என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது போல் குஜராத்தில் குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்படுகின்றனர். எனவே பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததும் மீனவர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags:

Leave a Reply