தமிழக பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முக்கிய தலைவரான அத்வானி வேலூரில் பிரச்சாரம் செய்தார். வேலூர் தொகுதியில் புதிய நீதிகட்சி தலைவரான ஏசி. சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார். அங்கு நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அத்வானி பேசியதாவது;

1952ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பங்கேற்றவன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். வாஜ்பாய் அமைச்சரவையில் துணைபிரதமராக பதவிவகித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. இதனால் அதிமுக-திமுக இடையேயான போட்டி என்ற நிலைமாறி தற்போது அதிமுக-பாஜக இடையேயான போட்டியாக மாறியுள்ளது. பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் குஜராத்தை மோடி வளர்ச்சியடைய செய்ததுபோல் தமிழகத்தையும் வளர்ச்சியை நோக்கி முன்னேற்றி செல்வார் என அத்வானி கூறினார்.

Leave a Reply