தேவையற்ற விஷயங்களை பேசுவதை தவிர்த்து, நாட்டின் வளர்ச்சிகுறித்த விஷயங்களை பாஜக நிர்வாகிகளும், பாஜக., ஆதரவாளர்களும் பேசலாம் . சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது, பிரசாரத்தின் போக்கை திசைமாற்றி விடும்,” என்று பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் களில் ஒரு வரான பிரவீன் தொகாடியா, பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் கிரிராஜ்சிங் போன்றோர், சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இது குறித்து, எதிர்க் கட்சியினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, பாஜக., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி கூறியுள்ளதாவது:இது, தேர்தல்நேரம். பா.ஜ., நிர்வாகிகளும், நம் நலம் விரும்பிகளும், தேவையில்லா, வெறுப்பூட்டும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். இப்படி தெரிவிப்பது, பிரசாரத்தின் போக்கை திசைதிருப்பி, எதிர் மறை விளைவை ஏற்படுத்தி விடும்.

இது போன்ற சர்ச்சைக் குரிய விஷயங்களை, எப்போதும் ஆதரிக்கமாட்டேன். தேவையற்ற விஷயங்களை பேசுவதை தவிர்த்து, நாட்டின் வளர்ச்சிகுறித்த விஷயங்களையும், சிறப்பான நிர்வாகத்தை ஏற்படுத்துவது குறித்தும், பிரசாரத்தில் தெரிவிக்கலாம்.தற்போது, நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும், பாஜக., சிறப்பான நிர்வாகத்தை தரும் என்று , கருதுகின்றனர். எனவே, அதற்கேற்ற வகையில், நம் பிரசாரம் அமையவேண்டும். சின்ன, சின்ன விஷயங்களை பொருட்படுத்த வேண்டாம்.என்று மோடி கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply