பா.ஜ.க தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமை தேர்தல் கமிஷனர் விஎஸ்.சம்பத், மத்திய தேர்தல் ஆணையர் பிரம்மா நசிம்சைதி ஆகியோரை சந்தித்து புகார்மனு அளித்தார்.

அதில், ”மோடி குறித்து காங்கிரஸ் கட்சியினர் தவறான தனிப்பட்ட விமர்சனங் களை கூறி வாக்காளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயற்சிசெய்கிறார்கள்.

மத்திய அமைச்சர்கள் பெனி பிரசாத் வர்மா, கபில் சிபல் ஆகியோர் ஆதரமற்ற குற்றச் சாட்டுகளை கூறிவருகிறார்கள். தேர்தல் நடத்தைகள் விதிகளை மீறுகிறார்கள். வாக்காளர்கள் மனதில் பயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

மோடியை ஹிட்லர், இடி அமீன் என்கிறார்கள். கொலைசெய்தவர் என்று மோடியை பற்றி குறிப்பிடுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply