தன்னார்வ தொண்டு நிறுவனங் களோடு இணைந்து நான் ஆட்சிக்கு வருவதைத்தடுக்க காங்கிரஸ் முயற்சிசெய்து வருகிறது” என்று நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் தொகுதிவேட்பாளரும் நடிகருமான வினோத் கன்னாவை ஆதரித்து பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி பிரச்சாரம்செய்தார். பதான்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

போர்களில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை விட வறுமையால் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நமது விவசாயிகளை அரசாங்கமே கொலைசெய்து வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் நிலை மாறும்.

நாட்டின் உணவுத்தேவையில் பெரும் பகுதியை பஞ்சாப் விவசாயிகள் பூர்த்திசெய்து வருகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் உணவு தானியங்களுக்கான ஆதாரவிலை அதிகரிக்கப்படும். பஞ்சாபில் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் நிறைவேற்றப்படும்.

மத்தியில் இப்போது தாய், மகன் கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. அந்தக்கூட்டணி நாட்டை சீர்குலைத்து விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நாட்டை குறித்து அக்கறையே இல்லை. தனது மகனை (ராகுல்) குறித்து மட்டுமே அவர் கவலைப்படுகிறார்.

இன்றைய நிலையில் மத்தியில் ஸ்திரமான அரசு அமையவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆட்சி பறிபோவது உறுதி என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்துவிட்டது. அவர்களின் பார்வை இப்போது என் பக்கமாகத் திரும்பியுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நான் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவேண்டும் என்ற ஓர் அம்ச கொள்கையோடு காங்கிரஸ் தீவிரமாக களப்பணி ஆற்றிவருகிறது.

ஆனால் பாஜகவுக்கு ஆதரவாக இப்போது பெரும்புயல் உருவாகியிருக்கிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது. மே 16-ம் தேதிக்குப்பிறகு எங்கிருப்போம் என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்போதே தெரிந்துவிட்டது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை நிச்சயமாக இரட்டை இலக்கத்தைத் தாண்டாது. கறுப்புப்பணம் என்ற பெயரைச் சொன்னாலே காங்கிரஸ் தலைவர்களுக்கு நடுக்கம் வந்துவிடுகிறது. காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஒருவர் (அம்ரீந்தர் சிங்) தனக்கு வெளிநாட்டு வங்கியில் கணக்கு இருப்பதை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்விரைவில் விளக்கமளிக்க வேண்டிய நிலை வரும்.

இந்தியாவை போரில் தோற்கடிக்க முடியாதவர்கள், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளால் இந்தியாவை அழிக்க முடியாதவர்கள் இப்போது ஒருபுதிய வழியைக் கையாண்டு வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்துக்குள் அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) இருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் நமது நாட்டின் இளைஞர்களை அழிக்க திட்டமிட்டுவருகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லையில் பாதுகாப்பு நவீனப்படுத்தப்படும். அதன் மூலம் போதை கடத்தலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

Tags:

Leave a Reply