முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாககூறும் காங்கிரஸ் கட்சியின் துணைதேர்தல் அறிக்கைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி துணைதேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பின்தங்கிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இருந்து 4.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி தரப்பட்டுள்ளது.

இதற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறியதாவது: காங்கிரஸ் துணைதேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தோற்கும் கட்சியின் துணைதேர்தல் அறிக்கையை யாரும் நம்பமாட்டார்கள். நாளைக்கே நிலாவை பிடித்துதருவதாக கூட தோற்பவர்கள் வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் அதையாரும் நம்ப மாட்டார்கள். ஐ.மு., கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, துணைதேர்தல் அறிக்கையை பற்றி விவாதிக்கக் கூட யாரும் விரும்பவில்லை. இது, சிறிதளவாவது ஓட்டுவாங்க காங்கிரஸ் செய்யும் கடைசிதந்திரம். ஆனால் அது எடுபடாது. என்று பிரகாஷ் ஜவதேகர் கூறினார்

Tags:

Leave a Reply