சென்னை குண்டு வெடிப்பு வழக்கில் காவல்துறையினர் வெளியிட்ட வீடியோவில் உள்ள வழுக்கை தலைக் காரன் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவன் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை குண்டு வெடிப்பு வழக்கில் தமிழகபோலீசார் சதிகாரன் ஒருவனின் வீடியோவை வெளியிட்டனர். சென்ட்ரல் ரயில்நிலையத்தின் பிளாட்பாரம் எண் 9ல் உள்ள சி.சி.டிவி கேமராவில் அந்தநபரின் உருவம் பதிவானது. குண்டுவெடிப்பதற்கு முன்பு அந்த நபர் கவுதாத்தி எக்ஸ்பிரஸின் எஸ்3 பெட்டியிலிருந்து இறங்கி பதட்டத்துடன் அவசரமாகசெல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது.

அந்த வீடியோவில் உள்ள நபர் வழுக்கை தலையுடன் சுமார் 35வயது மதிக்கத்தக்கவனாக உள்ளான். அந்த வீடியோவைபார்த்த அஸ்ஸாமை சேர்ந்தபலரும் அவனை தங்கள் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் பார்த்துள்ளதாக போன்செய்து தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எஸ்.பி. விஜயகுமாரி தலைமையில் தனிப் படை போலீசார் கவுகாத்தி விரைந்தனர். அங்கு அவர்கள் சதிகாரன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:

Leave a Reply