நாட்டில் மாற்றத்தை உண்டாக்க இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், மக்கள் பெரும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, இன்று திங்கட் கிழமை நடக்க இருக்கும் தேர்தலில் மக்கள் பெறும்திரளாக வாக்களிக்கவேண்டு என பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து நரேந்திரமோடி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது, ” மக்கள் பொய்வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிட்டனர். தோல்விகளை மறைக்க, பழைய தேய்ந்தகுடும்ப வரலாற்று குறிப்புகளை கேட்டு கேட்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர். மக்கள் நாளைய நாளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே மக்கள்விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.

கடந்த எட்டுமாத காலமாக நான் மேற்கொண்ட பிரசாரங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தவர்களுக்கு எனது நன்றி. நடக்க இருக்கும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் வரலாறுகாணாத அளவில் மக்கள் பெரும்திரளாக வந்து வாக்களிக்க வேண்டும். இளைஞர்களே, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று வாக்களியுங்கள். உங்களின் ஒவ்வொறுவாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. வலிமையான, வளர்ச்சிமிகுந்த இந்தியா இந்த உலகிற்கே வழிகாட்டியாய் திகழவாக்களியுங்கள்”.

Tags:

Leave a Reply