இந்தியாவில் மக்களவைதேர்தல் நிறைவு பெற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக. அமோகவெற்றி பெறும் என்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்து வரவிருக்கும் புதியஅரசுடன் இணக்கமாக செயல்பட காத்திருப்பதாகவும், எல்லா நாடுகளும் இந்த புதியரசுக்கு ஒத்துழைப்பை தரும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாஜக. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் புது டெல்லியில் இன்று பேசுகையில், ”அமெரிக்க அதிபர் ஒபாமா இப்படி கருத்துதெரிவிப்பதில் இருந்தே எந்தப்பக்கம் காற்று வீசிக்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். அனைத்து நாடுகளும் புதிய அரசுடன் நிச்சயமாக ஒத்துழைக்கும். அமெரிக்காவின் கருத்தை பாஜக வரவேற்கிறது.” என்று தெரிவித்தார்.

Leave a Reply