தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, மத்தியில் தே.ஜ.,கூட்டணி ஆட்சியமைக்க ஆதரவு தரவிரும்பும் கட்சிகளை வரவேற்கிறோம்” என பாஜக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அமித்ஷா, தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தேர்தலில் 290 இடங்களிலிருந்து 305 இடங்கள்வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். உத்தரப் பிரதேசத்தில் 50 முதல் 55 இடங்கள் வரை பாஜக கைப்பற்றும். தேர்தலில் 272 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்துடன் போட்டியிட்டோம். நிச்சயம் அத்தனை இடங்களில் பாஜக கூட்டணி வெற்றிபெறும்.

தேர்தலில் ஒரு இடத்தை கைப்பற்றும் கட்சிகூட, பாஜக கூட்டணிக்கு ஆதரவு தர விரும்பினாலும், தேசிய நலன் கருதி வரவேற்போம். கூட்டணியில் சேர்வதுதொடர்பாக பிற கட்சிகளுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்துகிறதா? என கேட்கிறீர்கள். ஆனால் இந்தகேள்விக்கு என்னால் பதிலளிக்க இயலாது. எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற பாஜக மூத்த தலைவர்களின் எதிர் கால பணி குறித்து கட்சியின் ஆட்சிமன்றக் குழு முடிவுசெய்யும்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்காக அந்தமாநிலத்தை 30 பகுதிகளாக பிரித்து, அதற்கேற்ற செயல் திட்டங்களை வகுத்து செயல்பட்டோம். உ.பி.,யின் மேற்கு மற்றும் கிழக்குப்பகுதியில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும். பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்படும் என்றார்.

Leave a Reply