லோக்சபா தேர்தலில் இதுவரையிலான முடிவுகள் அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலை வகிகிறது. இதில் பாஜக மட்டும் தனிப் பெரும்பான்மையுடன் 276 தொகுதிகளை வென்று தனித்தே பெரும்பான்மையை பெற்று வரலாறு படைத்துள்ளது

நாடுமுழுவதும் 543 லோக்சபா தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப் படுகின்றன. முதலில் தபால்வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இது வரையிலான முடிவுகளில் பாஜக கூட்டணி 340 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தனித்தே 285 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

அடுத்த இடத்தில் மாநிலக் கட்சிகள் 145 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ வெறும் 47 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைவிட மிக அதிகமாக எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றிருப்பதால் மத்தியில் ஆட்சியை அமைக்கிறது. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.

Leave a Reply