பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பொள்ளாச்சியில் சந்தித்து பேசினார்.

 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சகாப்தம் என்னும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. இப்படப்பிடிப்பில் விஜயகாந்த் தீவிரகவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள வாழக்கொம்பு நாகூர் பகுதியில் ஒரு விடுதியில் விஜயகாந்த் தங்கியுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றிதெரிவிக்கும் வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக் கிழமை இரவு 11 மணி அளவில் சந்தித்தார்.

Leave a Reply