பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திரமோடி தேர்வு செய்யப்பட்டார். மக்களவை தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதைதொடர்ந்து , நரேந்திர மோடி புதிய பிரதமராக தேர்வு செய்வதற்கான கட்சியின் நாடாளுமன்றகுழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதில் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இவர்களை தவிர கூட்டணி கட்சியினரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தை பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் துவங்கி வைத்தார். துவக்க உரையில், மோடியின் பிரச்சாரத்தாலேயே பாஜக அமோக வெற்றி பெற்றதாக புகழாரம் சூட்டினர் .

பின்னர், பாஜக நாடாளுமன்ற குழு தலைவர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன் மொழிந்தார். முரளிமனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிய மோடி பாஜக நாடாளுமன்றகுழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். பிரதமராகவும், நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். மோடிக்கு அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3.15 மணியளவில் நரேந்திரமோடி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார். மத்தியில் ஆட்சியமைக்க முறைப்படி உரிமைகோருவார் என தெரிகிறது.

Leave a Reply