ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள இந்திய துணைதூதரகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு, பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக. தலைவர் ராஜ்நாத்சிங் இது தொடர்பாக கூறியதாவது,

இந்திய தூதரகம்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் துரதிருஷ்ட வசமானது, அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள் என்றசெய்தியை அறிந்தபிறகு தான் சாந்தம் அடைந்ததாகவும், தாக்குதலின்போது துரிதமாக செயல்பட்டு , பயங்கர வாதிகளை சுட்டு வீழ்த்திய இந்திய – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளவதாக அவர் கூறினார்.

Leave a Reply