மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களே இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடியின் அலுவலகம்

வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப் படவில்லை.

சிறிய அமைச்சரவை, அதிகபட்ச செயல்திறன் கொண்ட நிர்வாகம் என்ற புதியகொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசு இயங்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதியமுறையின் மூலம், பல்வேறு துறைகளுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தமுடியும் என்றும், பணிகள் துரிதமாக நடைபெற இது வழிவகுக்கும் என்றும் மோடியின் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றுக்கொன்று தொடர்புடைய துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அதனை ஒருஅமைச்சரின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே இதன் நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மட்டம் முதல் பல படிநிலைகளின் வழியாக கீழ்மட்டம் வரை, அரசின் அனைத்துப் பணிகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதே மோடியின் திட்டம் என்றும், இதனை கருத்தில்கொண்டே கடந்த 4 நாட்களாக இதற்கான ஆலோசனைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply