மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் முறைப்படி பொறுப் பேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் தமிழகத்தில், பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து டெல்லி உத்யோக் பவனில் உள்ள கனரக தொழில் துறை அமைச்சக அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், பொருளாளர் மோகன்ராஜூலு, வானதி சீனி வாசன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பொறுப்பேற்றுக் கொண்ட பின் நிருபர்களிடம் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி என் மீது முழுநம்பிக்கை வைத்து இந்தபொறுப்பை வழங்கி உள்ளார். கனரகதொழில் வளர்ச்சி மிகவும் முக்கியம். தொழில்துறை முன்னேற்றத்தின் மூலம் நாட் டின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் பாடுபடுவேன்.

தமிழகத்தில் திருச்சி பெல்நிறுவனம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அந்த நிறுவனத்தை முன்னேற்ற திட்டமிட்டு வருகிறேன்.தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான மீனவர்பிரச்சினை குறித்து டெல்லி வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகிடைக்கும் என்று நம்புகிறேன். என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply