காங்கிரஸ் தனது வரலாற்று தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவே தெரியவில்லை. உப்பு சப்பு இல்லாத விஷயத்தை எல்லாம் பேசி பேசி மக்களை எரிச்சல் படுத்தி எதிர்க்கட்சி அந்தஸ்த்தை இழந்த பிறகும் கூட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வெற்றுப்பேச்சை விடுவதாக இல்லை.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஸ்மிரிதி இராணி மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் பட்டப்படிப்பு கூட படிக்காத ஒருவரை எப்படி மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மெத்தத்தப்படித்த மேதாவிகலான மன்மோகன் சிங் , ப.சிதம்பரம் , அலுவாலியா , சச்சி தாரூர் , கபில் சிபில் போன்றோர் எதை சாதித்தார்கள்?. படிக்காத மேதைகள் காமராஜரும் , காக்கணும் காங்கிரஸ் தலைவர்கள் இல்லையா?. 1957ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் தானே தற்போதைய தமிழகத்தின் அபரிதமான கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. மெத்தப்படித்த இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டமன்றே.

ஸ்மிரிதி இராணிதான் காங்கிரசின் பாரம்பரியமான தொகுதியான அமேதியில் போட்டியிட்டு ராகுல் காந்தியின் அமைதியை நிலைகுலைய செய்தார். மக்களின் கவனம் ஸ்மிரிதியின் பக்கம் திரும்பியதை கண்டு அஞ்சிய காங்கிரஸ் கடைசியில் பிரியங்கா காந்தியை களம் இறக்கித்தான் நிலைமையை சமாளித்தது.

பட்டப்படிப்பு படிக்காத ஸ்மிரிதி இராணி கடந்த இரண்டு வருடத்தில் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள் 350 , கலந்துகொண்ட விவாதங்கள் 57. ஹார்வர்ட்டில் படித்ததாக கூறப்படும் ராகுல் காந்தி 5ந்து வருடத்தில் எந்த கேள்விகளையும் எழுப்பவில்லை, இரண்டு விவாதங்களில் மட்டுமே கலந்துகொண்டுள்ளார். எனவே ஒருவருடைய தகுதியை நிர்னயிப்பது கல்வியல்ல அவருடைய செயல்பாடுகளே. அந்த விதத்தில் ஸ்மிரிதி இராணி வெற்றிப்பெற்று விட்டார். அங்கேயும் ராகுலுக்கு தோல்வி முகமே.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply