மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது சொந்த ஊரில் உள்ள அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

அவரது சொந்த ஊரான மகராஷ்டிரா மாநிலம் பீட்மாவட்டத்தில் உள்ள பார்லி வஜிநாத் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு நாளை பார்லியில் நடைபெறுகிறது. மத்திய அமைச்சராக பதவியேற்ற முண்டேவுக்கு பீட்மாவட்டத்தில் இன்று மாலை பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்ள தான் அவர் டெல்லி விமான நிலையத்திற்கு செல்கையில் விபத்தில் சிக்கினார்.

Leave a Reply