டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும்வழியில் சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய ஊரகவளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக் டிவிட்டர் வலை தளத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், முண்டேவின் இழப்பினால் பெரும்துயரமும் அதிர்ச்சியும் அடைதுள்ளேன். அவருடைய மரணம் நாட்டிற்கும், அரசுக்கும் பெரிய இழப்பாகும்.

முண்டே ஒரு உண்மையான தலைவர். சமூகத்தில் பிற்படுத்தப் பட்ட நிலையில் இருந்து உயரத்திற்குசென்று மக்களுக்காக அயராது உழைத்தவர். முண்டேவின் மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply