இந்திய கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவில் பிரதமர் நரேந்திர மோடி பயணிக்க உள்ளார். ஜூன் 14-ம் தேதி கோவா கடற் பகுதியில் இந்தபயணத்தை அவர் மேற்கொள்கிறார்.

விமானங்களை தாங்கிச்செல்லும் இந்த ஐ.என்.எஸ் விக்ர மாதித்யா கப்பல் கடந்தாண்டு, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட போதும், வரும் 14ம் தேதிதான் பிரதமர் அதனை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பல் 284 மீ நீளமும் 60 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த நீள, அகலம் ஏறத்தாழ 3 கால்பந்து மைதான பரப்பளவிற்கு சமமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தகப்பலில் மொத்தம் 22 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் ஏராளமான அறைகள் கட்டப்பட்டுள்ளன. கிட்டதட்ட 1,600 நபர்களை ஏற்றிக்கொள்ளும் திறன்கொண்ட இந்த கப்பல் மிதக்கும் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதே நாளில், நாட்டின் இரண்டாவது விமானந்தாங்கி போர்க் கப்பலான, ஐஎன்எஸ்., விராத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.ரஷ்யாவிடம் இருந்து, 15 ஆயிரம்கோடி ரூபாய் விலையில், இந்தகப்பல் வாங்கப்பட்டுள்ளது.

Leave a Reply