மத்திய அமைச்சர்கள் தங்கள் சொத்துவிவரங்களை அடுத்த மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் தாங்கள் நிர்வகித்துவரும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், தொழில் நிறுவனங்கள், கடன்பத்திரங்கள், கையிருப்பு ரொக்கம், நகைகள், பங்கு மற்றும் பரிவர்த்தனை குறித்த அனைத்து விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

புதிய அரசு பொறுப்பேற்றபிறகு சொத்து விவரங்களை அமைச்சர்கள் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யவேண்டும் என்பது அரசின் நெறிமுறையில் உள்ளது.

அரசிடமிருந்து அசையா சொத்துக்களை வாங்குவது, விற்பதுபோன்ற செயல்களில் அமைச்சர்கள் ஈடுபடக் கூடாது. அதிக மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வாங்கக் கூடாது. ஆனால் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போதோ அல்லது இந்தியாவில் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்கும்போதோ அளிக்கப்படும் மரபுப்படியான, கவுரவப்படுத்த கூடிய பரிசுப்பொருட்களை வாங்கினால் அதனை மட்டும் தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம். மரபுப்படியான பரிசாக அல்லாமல் அதன் மதிப்பு ரூ.5 ஆயிரத்துக்கு உள்ளே இருந்தால் அவற்றை வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply