‘இந்திய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக் நியமிக்கப்பட்டது இறுதியானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் . இதன் மூலம், இந்த விவகாரத்தில் எழுந்த சர்ச்சைக்கு அவர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இந்தவிவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில், பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ராணுவ தலைமை தளபதி நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு, இறுதியானது. மத்திய அரசு அதில் உறுதியாக இருக்கும்.

முந்தைய ஐ.மு.,கூட்டணி அரசு, கடந்த சிலவாரங்களுக்கு முன்பு தான் ராணுவ தலைமை தளபதி நியமன முடிவை எடுத்தது. குறிப்பிட்ட சிலவிஷயங்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கும்வழக்கம், நமது நாட்டில் உள்ளது. ஆதலால் இந்த விவகாரத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலாக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். 

Leave a Reply