பார்லிமென்ட் கூட்டுக்கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றிதெரிவித்து, லோக்சபாவில் கடந்த 11ல், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின்போது, 1,200 ஆண்டுகால அடிமை புத்தி, இன்னும் நம்மை ஆட்டுவிக்கிறது; சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ள நபரை சந்திக்கும்போது, அவருடன் பேசகூட நடுங்குகிறோம் என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.

அதை சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர் . வெள்ளைகாரர்கள் தானே நம்மை 600 வருடம் அடிமைப் படுத்தினார்கள் மோடி 1200 வருடம் என்கிறாரே .. பிரதமர் மோடி, முஸ்லிம் மன்னர் நம்மை அடிமைப் படுத்தியதை பற்றியும் கூறுகிறாரா என்ற பிரச்சனையை கிளப்பினர் . ஒருசாரார் அதை சரி என்றும், மற்றொரு சாரார், வரலாற்றை, மோடி திரித்து கூறுகிறார் என்றும் விவாதித்தனர். இன்னும் சிலர், உண்மையான வரலாற்றை மறந்து விட்டோம்; அதை மோடி நினைவுபடுத்தியுள்ளார் என, கருத்து தெரிவித்துள்ளனர்.

வரலாற்று ஆராய்ச்சியாளர் மக்கன்லால் கூறியதாவது: பிரதமர் மோடி, வரலாற்றை சரியாகத்தான் கூறியுள்ளார்; அது வரலாற்று உண்மைதான். கோரி மன்னர், கஜினி, சுல்தான்கள் போன்ற அனைத்து முகலாய மன்னர்களும், நம் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை; அவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் நம்நாட்டின் மன்னர்கள் மீது படையெடுத்து, அவர்களை சிறைபிடித்து, பொருட்களையும், நம் வளங்களையும் கொள்ளையடித்தனர்; நம்மக்களை அடிமைப்படுத்தினர். எனவே, முகலாய மன்னர்களையும் சேர்த்துதான், மோடி, 1,200 ஆண்டு அடிமைத்தனம் என, குறிப்பிட்டுள்ளார்; அது சரிதான். இவ்வாறு, அவர் கூறினார்.

சமூக விஞ்ஞானி சிவவிஸ்வநாதன் கூறுகையில், அடிமைப்பட்டிருந்ததை பற்றிதான் மோடி கூறியுள்ளார். அவர்கள் முகலாய மன்னர்களாக இருந்தால் என்ன, வெள்ளைக் காரர்களாக இருந்தால் என்ன. இருபிரிவினர் ஆட்சியின் கீழ், நாம் அடிமையாக இருந்துள்ளோம் என்பது உண்மைதானே, என்றார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர், ராஜிவ் குமார் ஸ்ரீவத்சவா கூறும்போது, நம் நாட்டிற்குள் படையெடுத்துவந்த முகலாய மன்னர்களை, இந்துக்கள் மட்டுமின்றி, முஸ்லிம்களும் எதிர்க்கத்தான் செய்தனர்; இதை, பழங்கால நூல்கள் விவரிக்கின்றன, என்றார்.

Tags:

Leave a Reply