மாணவியர் விடுதியில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக பாஜக தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மாணவியர் விடுதியில் நுழைந்து இருமாணவிகளை பாலியல் பலாத்காரம்செய்த சமூக விரோதிகளின் மிருகத்தனமான செயல் கடும் கண்டனத்துக் குரியது.

குழந்தைபருவத்தில் உள்ள இந்தமாணவிகள், கொடியவர்களின் பிடியில் சிக்கியது பெரும் அதிர்ச்சி தருகிறது.

இதுபோன்ற பாலியல் குற்றங்களில் தொட்புடையவர்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.

தனியார் மற்றும் அரசு நடத்தும் மாணவியர் விடுதிகளில் பாதுகாப்பு, கண் காணிப்பு இருக்கவேண்டும் என்பதை பொள்ளாச்சி சம்பவம் உணர்த்துகிறது.

பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கும் தலா ரூ. 3 லட்சம் நிதிவழங்கியதுடன், அவர்கள் அரசு விடுதியில் தங்கிப்படிக்க வாய்ப்புவழங்கிய தமிழக அரசின் செயல் ஆறுதல் தரும்  நடவடிக்கையாகும்.

பொருளாதார உதவி மட்டும் அல்லாது, குற்றம்செய்த கொடியவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்.

அடிப்படைவசதிகள், பாதுகாவலர்கள் இல்லாமல் விடுதி நடத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனி எங்கும், எப்போதும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply