யஸ்வந்த்சின்கா, ஜார்கண்ட் முதல்வர் பதவிக்கு சரியான நபர் என பாஜக மூத்த தலைவர் அத்வானி புகழ்ந்து பேசியுள்ளார்.ஜார்கண்ட் மாநிலம் ஹசாரி பாக் மாவட்ட மின்வாரியத்தில் ஊழல் நடத்திருப்பதாககூறி பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

அப்போது மின் வாரிய உயர் அதிகாரி ஒருவரை தாக்கியதாக கூறி பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த் சின்கா மற்றும் கட்சி தொண்டர்கள் 54பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்தவழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 2 முறையும் ஜாமீன் பெற்றுக்கொள்ள மறுத்ததால் யஸ்வந்த் சின்கா உட்பட அனைவரின் நீதிமன்ற காவல் வரும் 28ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான அத்வானி நேற்று ஹசாரிபாக் சிறைக்குசென்று யஸ்வந்த் சின்காவை சந்தித்துபேசினார். அவருடன் முன்னாள் முதல்வர் அர்ஜூன் முண்டா, மாநில பாஜக தலைவர் ரவிந்திர ராய் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். இந்த சந்திப்பு 2 மணிநேரம் நடந்தது. பின்னர், சிறையில் இருந்து வெளியில்வந்த அத்வானி அளித்த பேட்டி: கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்காக ஒருவரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை யஸ்வந்த் சின்கா தொடங்கி உள்ளார். அதற்காக அவரை மனதார பாராட்டுகிறேன்.

ஜார்கண்ட் மட்டுமின்றி, நாடுமுழுவதும் உள்ள பாஜக தொண்டர்களும், தலைவர்களும், யஸ்வந்த் சின்கா சிறையிலிருந்து வெளியில்வந்து போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தவேண்டும் என விரும்புகிறார்கள். தலைவர்கள், தொண்டர்களின் உணர்வுக்கு யஸ்வந்த் மரியாதை அளித்து ஜாமீனில் வர வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும்.

ஜார்கண்ட்டில் விரைவில் நடக்க உள்ள சட்டமன்றதேர்தலில், கட்சியை தலைமை ஏற்றி வழி நடத்தி செல்லக்கூடிய தகுதி யஸ்வந்த் சின்காவுக்கு உண்டு. அவரே மாநில முதல்வர் பதவிக்கான சரியான நபரும்கூட. அதற்கான தலைமை பண்பும், நல்ல ஆட்சி தரக்கூடிய திறமையும் யஸ்வந்த் சின்காவுக்கு உண்டு. என்று அத்வானி கூறினார்.

Tags:

Leave a Reply