முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அணையை மேற்பார்வையிட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அதன்பின்னரும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச் சரவை கூட்டத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது.

அமைச்சரவை கூட்டத்திற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையை மேற்பார்வையிடும் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதாக கூறினார்.

Tags:

Leave a Reply