ரயில் கட்டண உயர்வு சரியான முடிவே என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். “சரக்கு கட்டண வருவாயினால் பயணிகள் ரயில்கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் இன்று சரக்குக் கட்டணமும் நெருக்கடிக்கு வந்துள்ளது எனவேதான் இந்தகட்டண உயர்வு.

ரயில் கட்டணங்களை உயர்த்தாமல் கடன்பொறியில் சிக்குவதா அல்லது ரயில் கட்டணங்களை உயர்த்துவதா என்ற இரட்டை நிலையில் அரசு நல்லதெரிவையே மேற்கொண்டுள்ளது, “உயர்தரமான, உலகத்தரம் வாய்ந்த ரயில்வே வேண்டுமா அல்லது மோசமான ரயில்வே வேண்டுமா என்பதை அரசு தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.

ஆகவே, ரயில்வே அமைச்சர் கடினமான, ஆனால் சரியானமுடிவையே எடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரயில்வே நஷ்டத்தில் இயங்கிவருகிறது. எனவே பயணிகள் தாங்கள் பெரும் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் கொடுப்பதினால் மட்டுமே இந்தியரயில்வே தொடர்ந்து நீடிக்கும்” என்று ஜேட்லி கூறினார்.

இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஜவடேகர் கூறுகையில், “ரயில்வே உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது, மக்கள் நல்ல வசதிகளையும் பாதுகாப்பையும் கோரிவருகின்றனர். கட்டண உயர்வு என்பது அதனைநோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும்” என்றார்

Leave a Reply