பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் அலுவலகத்தின் தெற்குபிளாக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16ம் தேதி போபாலில் ஒருநிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், நரேந்திர மோடி ஏழைமக்களின் நலன் குறித்து பேசியுள்ளார். ஏழைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவது குறித்தும் தெரிவித்துள்ளார். அவர் அவருடைய லட்சியங்களை அடைய நாம் ஒத்துழைக்க வேண்டும் எனப்பேசியிருந்தார். நரேந்திர மோடி மீது அதிகமாக எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். .

Leave a Reply