கருப்புபண விவகாரம் தொடர்பாக, சுவிஸ் அரசிடமிருந்து இது வரை எந்த தகவலையும் பெறவில்லை என தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

சுவிட்சர்லாந்தில் உள்ல 283 வங்கிகளில் இந்தியர்கள் உட்பட பலர் தங்களது கருப்புபணத்தை மறைத்து வருகின்றனர். அங்குள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள பணம்மட்டும் சுமார் ரூ 14 ஆயிரம் கோடி என சமீபத்தில் அந்நாடு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிடுமாறு கடந்த ஐ.மு., கூட்டணி அரசு சுவிட்சர்லாந்திடம் பெயரளவுக்கு கோரிக்கைவிடுத்தது. ஆனால், அதனை அந்நாடு மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பாஜக தலைமையிலான அரசு, சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்புபணத்தை மீட்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, கறுப்புபண மீட்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புபணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது இந்தியாவிற்கு தரப்படும் எனவும் அந்நாடு அறிவித்தது.

இந்நிலையில் கறுப்புப்பணம் தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வரவில்லை. சுவிஸ் அரசிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை. இது வரையில் சுவிஸ் அரசுடன் எந்த தகவல் பரிமாற்றமும் இல்லை. இவ்விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply