வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசீனாவை இந்தியாவிற்கு வரும்படி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

வங்காள தேசத்திற்கு சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ஹசீனாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, இந்தியபிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தை ஹசீனாவிடம் தெரிவித்தார்.

மேலும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மகமூத் அலியையும் சந்தித்தார் சுஷ்மா.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மகமூத் அலி, இரு நாடுகளுக்கும் இடையே விசா நடை முறைகளை இந்தியா எளிமைப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். மேலும், வங்காளதேச குடிமக்களில் 13வயதிற்கு கீழுள்ளவர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு மல்டிபிள் என்ட்ரி விசாக்களை வழங்கவும் இந்தியா சம்மதித்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த மாதம் வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்றபிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக வங்காள தேசத்திற்கு சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply