மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ச வர்தன், எய்ட்சை கட்டுப் படுத்துவதில் ஆணுறையைவிட ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணபந்தமே மேலானது என ஏற்கனவே கூறியிருந்தார். இந்தகருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் ஆர்எஸ்எஸ். கொள்கைகளை திணிக்க முயல்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஹர்ச வர்தன், தேசிய எய்ட்ஸ்கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்தாலும் சரி, மாநில அரசுகளின் அமைப்புகளாக இருந்தாலும் சரி எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பான உறவுபற்றியே வலியுறுத்தப்படுகிறது. இதிலேயே ஒருஇணையுடன் மட்டுமே உறவு என்ற கருத்தும் அடங்கியுள்ளது.

எனவே எய்ட்சை கட்டுப்படுத்த திருமணபந்தம் பற்றி கூறியது ஒருகலாசார ஆலோசனை மட்டுமல்ல, அறிவியல் பூர்வமானதும் கூட. ஆணுறை பற்றி நான் கூறியகருத்து சில ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பான உறவுக்கு ஆணுறை அவசியம்தான். ஆனால் மிகச்சிறந்த பாதுகாப்பான உறவு என்பது ஒருஇணையுடன் உண்மையானதாக இருப்பதுதான். வந்தபின் குணப்படுத்துவதை விட, வருமுன் காப்பது தான் எப்போதும் சிறந்தது.என்று ஹர்சவர்தன் கூறியுள்ளார்

Leave a Reply