கோவா ஆளுநர தனது சொந்த நன்மைக்காக தனதுபதவியை ராஜினாமா செய்யவேண்டும் என கோவா மாநில பாஜக தலைவர் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததை அடுத்து காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் நியமிக்கப்பட்ட சில மாநிலங்களின் ஆளுநர்களை பாஜக அரசு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் விவிஐபி.,களுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியிலிருந்து வாங்கியபோது நடந்த ஊழலில் மேற்குவங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரை சிபிஐ தமது தரப்பு சாட்சியங்களாக சேர்க்க இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

எனவே கோவா ஆளுநர் வான்சூ அவரது சொந்த நலன்கருதி அவராகவே பதவி விலகி விடுவது நல்லது அவர் மீது எந்த சொந்தவெறுப்பும் கிடையாது.

இதுபோன்ற சர்ச்சைகள் இருக்கும்போது அரசியல் அமைப்பு பதவியின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு அவர்களை பதவியில் இருந்து விலக்கி வைக்கவேண்டும். இல்லையெனில் அது அப்பதவியின் மீது ஒரு கலங்கத்தை ஏற்படுத்தி விடும் என கோவா மாநில பாஜக தலைவர் மெஸ்க்விடா தெரிவித்துள்ளார்.

Leave a Reply