இந்தியா முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல்தேதி மருத்துவர்கள் தினமாகவும் (Doctor’s Day) பட்டயக் கணக்காளர் தினமாகவும் (Chartered Accountants Day) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் இருபிரிவினருக்கும் தமது வாழ்த்துகளை பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

அவர் சமுக வலைத் தளமான டுவிட்டரில் தனது வாழ்த்துசெய்தியில் இதை குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் தினத்தன்று, மருத்துவர்கள் சமுதாயத்திற்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் அவர்களின் முயற்சிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்

பட்டயக் கணக்காளர்கள், இந்தியாவின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறார்கள். நான் என்னுடைய பட்டய கணக்காளர் நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

2013 ஜூ மாதத்தில் பட்டயக் கணக்காளர்களின் தேசியமாநாட்டில் அவர் பேசிய பேச்சின் இணைப்பையும் 2014 ஜனவரியில் நலவாழ்வுத் துறை குறித்து அவர் ஆற்றிய உரையின் இணைப்பையும் டுவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Leave a Reply