பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை தொடர்ந்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி, தான் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகிற 4-ம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

தலைநகர் ஸ்ரீநகர் செல்லும் அவர், காஷ்மீர் மாநிலத்தின் புகழ் பெற்ற வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக காத்ரா-உதாம்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள 25 கி.மீட்டர் தூர ரெயில்பாதை சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அன்று மாலை பாரமுல்லா மாவட்டம் உரி என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 240 மெகாவாட் நீர்மின் உற்பத்தி திட்டத்தையும் அவர் தொடங்கிவைக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் ஸ்ரீநகர் வரும் போது தீவிரவாதிகள் அதற்கு இடையூறு செய்யும்விதத்தில் ஏதாவது நாசவேலைகளில் ஈடுபடலாம் என்று கருதப்படுவதால் அதனை முறியடிக்கும் விதமாக ஸ்ரீநகர் உள்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப் படுத்துவது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே பிரதமரின் பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வந்துள்ள விசேஷபாதுகாப்பு படையினரும் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இதேபோல், கடந்த 2 நாட்களாக அதிக எண்ணிக்கையிலான துணை ராணு வத்தினரும், நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply