பாஜக ஆட்சிசெய்த மாநிலங்களில் நல்லாட்சி நடைபெற்றதாலும், பிரதமர் மோடியின் பிரபலத்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற முடிந்ததது என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில், பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமாபிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்தவிழாவில் கலந்துகொண்டு, சியாமா பிரசாதுக்கு மரியாதை செலுத்தியபிறகு, ராஜ்நாத்சிங் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, காங்கிரஸ் கட்சியை போன்ற மிகப் பெரிய கட்சி நாட்டில் இல்லை. ஆனால், அக்கட்சிக்கு ஈடாக பாஜக தற்போது வளர்ந்துவிட்டது.பாஜக ஆட்சி நடைபெற்று வந்த மாநிலங்களை மக்கள் நன்றாக கண்காணித்து வந்துள்ளனர். நிர்வாகத்திலும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் பாஜகவை விட வேறு எந்தக் கட்சியும் செய்யமுடியாது என்று அவர்கள் உணர்ந்து கொண்டனர். இதனால் தான், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய அளவில் பாஜகவால் வெற்றிபெற முடிந்தது.

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய், கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் சிறந்த பங்களிப்பை செலுத்தி, பாஜகவை மேலும் வளர்த்தெடுத்தனர் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Leave a Reply