மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், அலுவலகவேலை என கூறிக்கொண்டு , இனி, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு மத்திய அரசு, கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், அலுவலகங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், தங்கள் துறை சம்பந்தபட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்போவதாக அறிவித்து, அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதுவழக்கம். இதற்காக, அரசு தரப்பில், பலலட்சம் தொகை செலவிடப்படும். இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசு, இந்த விஷயத்தில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து, மத்திய நிதியமைச்சகம்,விரிவான குறிப்புகளை தயாரித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:அதிகாரிகள் வெளி நாடுகளுக்கு பயணம் செய்வதற்குமுன், அந்தபயணம் அவசியமானது தானா என்பதை உறுதிசெய்ய வேண்டும். ‘வெளிநாட்டுக்கு செல்லாமல், ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலமாகவோ, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள வெளிநாட்டு துாதரகங்களின் மூலமாகவோ, அந்த காரியத்தை செய்யமுடியாதா என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும்.இந்த பயணத்தால், நாட்டுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதற்கான காரணங்களை விளக்கவேண்டும்.

பயணம் மேற்கொள்ளும் அதிகாரி, இதற்குமுன், கடைசியாக எப்போது, வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என்பதை தெரிவிக்க வேண்டும்.ஏற்கனவே பயணம் செய்திருந்தால், இந்த முறை, அவருக்கு பதிலாக, ஜூனியர் அதிகாரி ஒருவரை, ஏன் அனுப்பக்கூடாது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.இதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் முறையான பதில் அளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரியின் வெளிநாட்டு பயணம் ரத்துசெய்யப்படும்.என்று , அதில் குறிப்பிப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply