தேசிய மகளிர் ஆணையம், தேசியகுழந்தைகள் உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலஅமைச்சர் மேனகா காந்தி பரிசீலித்து வருகிறார்.

இது குறித்து அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “தேசிய மகளிர் ஆணையத்திற்கு, தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தை விடக்குறைந்த அதிகாரமே உள்ளது. இவ்விரு ஆணையங்களுக்கும் சிவில் நீதிமன்றத்துகுரிய அதிகாரம் வழங்கலாம் என்று பிரதமருக்கு மேனகா பரிந்துரைத் துள்ளார். இதன்படி, ஆணையங்கள் தங்கள் உத்தரவை மதிக்காதவர்கள் மீது கைதுவாரண்ட் பிறப்பிக்க முடியும்” என்றனர்.

இவ்விரு ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆளும் கட்சிகளால் நியமிக்கப் படுகின்றனர். இதனால் ஆட்சிமாறும்போது அவர்கள் பதவி விலகுவதும், ஆணையங்களின் நடவடிக்கைகள் மீது உள்நோக்கம் கற்பிப்பதும் வழக்கமாக உள்ளது. எனவே இதற்கு முடிவு கட்டும் வகையில், ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு 3 ஆண்டுகள் நிரந்தர பதவிக் காலம் நிர்ணயிக்கவும் மேனகா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்காக பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் யோசனைகளை மேனகா வரவேற்க இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பை தனது அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply