2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வேபட்ஜெட் தாக்கல்செய்த மத்திய அமைச்சர் சதானந்தகௌடா, ரயிலில் பயணிக்கும் பயணிகள் எஸ்எம்எஸ் மூலம் உணவு ஆர்டர்செய்யலாம் எனவும், பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வேபட்ஜெட் தாக்கல்செய்த அவர், ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு, குடிநீர் ஆகியவற்றுடன் சுத்தமான சூழலை உறுதிசெய்ய 40 சதவீதத்துக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏசிபெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு சுத்தமான போர்வைகள், படுக்கைவசதிகளை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ரயிலில் உணவு ஆர்டர்செய்யும் பயணிகளுக்கு தரமான உணவு அளிக்கா விட்டால் கடும்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஒ தண்ணீர் அளிக்கப்படும் எனவும், ரயில் வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து அறிய ‘இண்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ்’ (IVRS) முறை பயன் படுத்தப்படும் எனவும், பயணிகள் அவர்களது உணவை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது மொபைல் மூலமாகவோ ஆர்டர்செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply