பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: “பட்ஜெட் பலபுதுமையான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ரயில்களில் பாதுகாப்பு, சுகாதாரம், வேகம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை தந்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லும் வகையில் இந்த பட்ஜெட்டை தயாரித்த பெருமை அனைத்தும் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவையே சேரும்” என்றார் .ராஜ்நாத்சிங்.

பாஜக துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, “இது ஒரு புரட்சிகரமான பட்ஜெட். ரயில்வே துறையின் பயணம், உலகளவில் தரமான சேவையை அளிக்கும் திசையில் செல்ல தொடங்கியுள்ளது” என்றார்.

பாஜக ஊடகப்பிரிவு பொறுப் பாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, “நவீனமயம், புல்லட்ரயில், தொழில்நுட்ப மேம்பாடு, உணவுத்தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட மிகமுக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

நாடுமுழுவதும் ரயில் பாதையை அமைக்கவேண்டும் என்ற வாஜ்பாயின் கனவை மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றும. காங்கிரஸ்கட்சி ஆட்சியில் இருந்தபோது, தனது வாக்குறுதிகளில் 30 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. நரேந்திரமோடி தலைமையிலான அரசுக்கு எதிராக கடும்விமர்சனங்களை முன்வைத்து வருவதன் மூலம் தனது வெறுப்புணர்வை அக்கட்சி வெளிப்படுத்தி வருகிறது. பா,ஜ,க அரசு தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும்; வெறும் அறிவிப்புகளுடன் நின்றுவிடாது” என்றார்.

Leave a Reply