நாட்டில் நாள் தோறும் அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுதொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டன. இதுதொடர்பாக நடந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர், ‘தேர்தலின்போது பா.ஜ.க வாக்களித்த சிறப்பான நாட்கள் எங்கே?’ என கேள்வி எழுப்பினர்.

எதிர்க்கட்சியினரின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:-

நாடுமுழுவதும் போதுமான அளவு உணவுப்பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. எனினும் சிலபகுதிகளில் பதுக்கல் காரர்கள் மிகப் பெரிய அளவில் உணவுப் பொருட்களை பதுக்கி வருகின்றனர். ஆனால் இவற்றை தடுக்க முதற்கட்ட நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது. விலைவாசி உயர்வை தடுக்கும் வகையில், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றின் ஏற்றுமதிவிலையை குறைத்தது, இந்த பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் கொண்டுவந்தது, பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.என்று ராம் விலாஸ் பஸ்வான் கூறினார்.

Tags:

Leave a Reply