பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி பிரேசில் செல்கிறார்.

ரஷியா, இந்தியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ சார்பாக பிரேசில் நாட்டில் வருகிற 14ம் தேதி மற்றும் 15-ம்தேதி உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வளர்ச்சிவங்கி அமைப்பது, ஐ.நா. மற்றும் சர்வதேச பொருளாதார சீர்திருத்தம் தொடர்பாக இந்தமாநாட்டில் உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நாளை புறப்படுகிறார். இரவில் பெர்லின் நகரை சென்றடையும் அவர் அங்கிருந்து திங்கட் கிழமை போர்ட்ட லேசா சென்று மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவருடன் நிதித் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசியபாதுகாப்பு ஆலோசகர் டோவல், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதாசிங் மற்றும் நிதித் துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் ஆகியோரும் செல்கின்றனர்.

பிரதமராகப் பதவியேற்ற பின்பு நரேந்திரமோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த மாதம் பூடான் சென்றார். அதன்பின்னர் இப்போது பிரிக்ஸ் மாநாட்டிற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply