நாட்டின் நிதிநிலை மேம்பட்டவுடன் தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறினார்.
இப்போதைக்கு தங்கத்தின்மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் உத்தேசம் அரசுக்குஇல்லை. நிதிநிலை மேம்பாடு அடைந்து பற்றாக் குறை குறையும் போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். தங்கத்தின்மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் ஒன்றும் கல்லில் எழுதப்பட்ட விதிகள்அல்ல. இவை காலத்திற்கு ஏற்ப மாற்றக் கூடியவையே என்றும் . நடப்புக்கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) மற்றும் நிதிப் பற்றாக் குறை ஆகியவற்றை நிர்வகிப்பதில் அரசு மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுகிறது என்றார்.
நடப்புக் கணக்குப் பற்றா குறையை குறைப்பதற்காக தங்கத்துக்கு அரசு அதிகளவில் சுங்கவரி விதித்தது. அத்துடன் தங்கத்தை இறக்குமதிசெய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ்வங்கி விதித்துள்ளது என்றும் ஜேட்லி குறிப்பிட்டார். அரசு மற்றும் ரிசர்வ்வங்கி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தங்கத்தின் இறக்குமதி அளவு 72 சதவீத அளவுக்குக் குறைந்தது என்றார் ஜேட்லி.