தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட், ஒரு துவக்கம்தான். ஆனால், சாதாரண மக்களின் தலைகளில் சுமையை ஏற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஒரு போதும் ஈடுபடாது,” என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி உறுதி அளித்தார்.

மத்திய நிதி அமைச்சரும், பாஜக., மூத்த தலைவருமான அருண்ஜெட்லி கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதே, பாஜக., அரசின் முதல்நோக்கம். அதன் துவக்கம்தான், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்; இது, முடிவல்ல.ஆனால், இதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என நினைத்தேனோ, அந்த அனைத்து மாற்றங்களையும் செய்து முடித்துவிட்டேன்.எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அந்தந்த விஷயங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். பதவியேற்ற, 45 நாட்களில் எதைச்செய்ய முடியுமோ, அதை செய்து முடித்துள்ளோம்.

சாதாரண மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபடாது. காப்பீடு, ரியல் எஸ்டேட், வருமானவரி, பாதுகாப்புதுறை ஆகியவற்றில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.பருவ மழை பொய்த்தால், திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை அடைந்துவிட முடியாது என்பது உண்மைதான். அது, ஒருசவாலான சூழலாகவே இருக்கும். ஆனால், அந்தசவாலை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராகவே உள்ளது. என்று அவர் கூறினார். 

Tags:

Leave a Reply