நம் நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் உலகத்தின் எதிர்காலத்தையும் வரையறுக்கும் வாய்ப்பு நமக்கு உள்ளது முக்கிய தருணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. அதிக அளவிலான பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்தை உலகம் சந்தித்து வருகிறது. பல முக்கிய பகுதிகளில்

சச்சரவுகளும் நிலையற்ற தன்மையும் வளர்ந்து வருகிறது. இவை வறுமையை சமாளிப்பதில் உள்ள சவால்களை அதிகப்படுத்துகிறது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி மாதிரியை உருவாக்குவதற்கும் சலாலாக உள்ளது.

அமைதி மற்றும் நிலையான சூழ்நிலையை மீண்டும் கொண்டு வருவதே உலகில் அவசரத் தேவையாகும். இதற்காக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

இந்த அவசியத் தேவையை பிரிக்ஸ்ஸால் பூர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். நான் இவ்வாறு நம்புவதற்குக் காரணம் சர்வதேச அமைப்புகளில் பிரிக்ஸ்-க்கு உள்ள தனித்தன்மை! ஏனென்றால் மற்ற அமைப்புகள் வளர்ச்சி அடைந்த நாடுகள் அல்லது ஒரே அடையாளங்களை பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் கூட்டமைப்பாகும். ஆனால், பிரிக்ஸ் “வருங்கால திறன்” என்ற அளவுகோலை கொண்டே நாடுகளை ஒன்று சேர்ந்துள்ளது. ஆகையால், பிரிக்ஸின் அடிப்படை நோக்கமே முன்னோக்கி பார்ப்பதாகும். அதனால், ஏற்கெனவே உள்ள சர்வதேச அமைப்புகளில் பிரிக்ஸ் புதிய கண்ணோட்டத்தையும் வழிமுறைகளையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். அதனால் நமது உறவு மற்றும் அமைப்பின் வளர்ச்சி இந்த அடிப்படை நோக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அமைதியான, சீரான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதில் பிரிக்ஸ் குரல் ஒன்று பட்டதாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். தீவிரவாதம், இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்ற உலகத்தின் முக்கிய சவால்களை எதிர்கொள்ள நமது ஒத்துழைப்பை நாம் இன்னும் பலப்படுத்த வேண்டும்.

வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உலக கருத்தினை வடிவமைப்பதில் பிரிக்ஸ் முன்னோடிப் பங்கு வகிக்க வேண்டும்.

2015-ற்குப் பிறகான வளர்ச்சி செயல்திட்டத்தின் முக்கிய அம்சமாக வறுமை ஒழிப்பு இடம்பெறுவதும் இதில் அடங்கும்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு, சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற உலக அமைப்புகளின் நிர்வாக முறையில் சீர்திருத்தங்களை நாம் உடனடியாக வலியுறுத்த வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் ஆட்சிமுறையை வடிவமைப்பதில் நாம் உதவ வேண்டும். வலுவான, சீரான மற்றும் நிலையான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிப்படையான வர்த்தக வளர்ச்சி முறை அவசியம். இது வளரும் நாடுகளின், வளர்ச்சி குறித்த விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும்.

மேலும், நலிந்தவர்களுக்குக்கான சிறப்பு தேவைகளும் இதில் இடம்பெறவேண்டும். முக்கியமாக உணவு பாதுகாப்பு போன்ற துறைகளில் இவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

 உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் செல்வாக்கை பிரிக்ஸ் அடைந்துவிட்டது. நமது நலன்கள் சிறக்க நமது உறவை மேலும் பலப்படுத்த வேண்டும். இதனால் தான் இதற்கு முன் நடந்த கலந்துரையாடல்களில் இந்த வலுவான மன்றத்தை பரந்துபடுத்துவதுபற்றி பேசியிருந்தேன்.

இந்த மாநாட்டைக் கடந்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயங்க வேண்டும். நமது மாநிலங்கள் நகரங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான துணை தேசிய அளவிலான பரிமாற்றங்களில் நாம் முதன்மையாக விளங்க வேண்டும்.

‘மக்களுடன் மக்கள்’ தொடர்பை மையமாக கொண்டு பிரிக்ஸ் செயல்பட வேண்டும். குறிப்பாக நமது இளைஞர்கள் முன் நின்று வழிநடத்த வேண்டும். புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கோடு பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மன்றத்தை நிறுவுதல் ஒரு நல்ல முயற்சியாக அமையும்.

பிரிக்ஸ் மொழி பள்ளிகள் துவங்குதல் மற்றொரு முயற்சியாக அமையும். அதில் நம் அனைவரின் மொழிகளும் கற்பிக்கப்படலாம். அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க பெரியளவிலான திறந்த நிலை இணையப் படிப்புகள் துவங்குவது குறித்தும் நாம் பரீசிலிக்க வேண்டும். பிரிக்ஸ் பல்கலைகழகம் அமைப்பது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த பல்கலைக்கழகம் நம் நாட்டில் உள்ள கல்வி வளாகங்களை இணையம் மூலமாகவும் மாணவர் ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மூலமாகவும் இணைக்க உதவும்.

*** நம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்பது மூலம் நாம் ஒவ்வொருவரும் வெற்றிபெற முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய அறிவு, திறன்கள், ஆதார வளங்களில் பெற்றுள்ள பலத்தை அறிந்து போற்ற வேண்டும். நமது அனுபவங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளை வகுக்கவேண்டும். இதன் மூலம் எண்ணற்ற வழிகளைக் கண்டுபிடிக்கலாம்.

மலிவான மற்றும் நம்பகமான தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களில் நமக்கு இருக்கும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல். செயற்கைகோல், தகவல் தொழில்நுட்பம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்களை கொண்டு தரமான கல்வி மற்றும் சுகாதாரத்தை எளிதில் கிடைக்கச் செய்தல்.பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறை மேம்பாட்டின் வளர்ச்சியை வடிவமைத்தல்.பேரழிவு மேலாண்மையில் உள்ள அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல் போன்றவற்றின் மூலமாக வழிகளை கண்டுபிடிக்கலாம்.

 உலக உறவுகளில் பொருளாதார சக்திகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. வர்த்தகம், சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம், பாரம்பரியம், திறமை போன்ற களங்களுக்கு ஏற்கனவே உள்ள கோட்பாடுகளை மாற்றியமைக்கும் சக்தி உண்டு. பிரிக்ஸில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம் மற்றும் வளங்களின் தனிப்பட்ட கலவையை கொண்டு உள்ளோம். நாம் நான்கு கண்டங்களை பிரதிபலிக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம். இதனைப் பயன்படுத்தும் வழிமுறைகளை பிரிக்ஸ் உருவாக்க வேண்டும். அது நம் அனைவருக்கும் நன்மை செய்யும். இதற்கான பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தில்லி மாநாட்டில் கண்ட, “புதிய வளர்ச்சி வங்கி” என்ற கனவு இன்று ஃபோர்டலேசாவில் நனவாகியுள்ளது. அது பிரிக்ஸ் நாடுகளுக்குப் பயன் தரும். அதுமட்டுமல்லாமல் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும். வளரும் நாடு என்ற வகையில் அது நம் சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

பிரிக்ஸின் எதிர்பாராத செலவுகளை சமாளிக்கும் ஏற்பாடானது பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார நிலைத்தைன்மையை பாதுகாக்க புது கருவியாக உள்ளது. உலக நிதி சந்தைகளில் நிலையற்ற தன்மை அதிகரித்து இருக்கும் இந்த வேளையில் இது ஒரு முக்கிய முயற்சியாகும்.

ஏற்றுமதி கடன் உறுதி முகமைகள் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவை வேறு சில முக்கியமான நடவடிக்கையாகும். இவை பிரிக்ஸ் நாடுகளுக்கு மத்தியிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

நாம் இன்னும் லட்சிய நோக்கோடு இருக்க வேண்டும் என்ற நிலையை நாம் அடைந்துவிட்டோம் என்று நான் நம்புகிறேன். நாம் இது போன்ற ஆக்கபூர்வமான வழிமுறைகள் மற்றும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். இவை பிரிக்ஸை தாக்கம் ஏற்படுத்தும் தளமாக மாற்றும்.

 எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. நம் நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் உலகத்தின் எதிர்காலத்தையும் வரையறுக்கும். “வசுதைவ குடும்பகம்” அதாவது “உலக முழுவதுமே ஒரே குடும்பம்” என்ற கருத்து எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை ஒரு பெரிய பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். வளரும் உலகத்தின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த பிரேசில் அதிபர் ரோசப்-க்கும், இந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

– என்று பிரிக்ஸ் மாநாட்டில் பாரதப் பிரதமர் மோடி உரையாற்றினார்.

Tags:

Leave a Reply